தமிழக திமுக அரசை கண்டித்து, மன்னார்குடியல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர். 
திருவாரூர்

மன்னார்குடி: திமுக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரதம் 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி காந்தி சிலை அருகே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, பாஜக மாவட்டத் தலைவர் ச.பாஸ்கர் தலைமை வகித்தார்.

DIN

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி காந்தி சிலை அருகே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, பாஜக மாவட்டத் தலைவர் ச.பாஸ்கர் தலைமை வகித்தார்.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது . மனசாட்சி இல்லாத , மக்கள் விரோத அரசாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவர் பேட்டை பி.சிவா போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பேசி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட பொதுச் செயலர்கள் வி.கே.செல்வம், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் பால.பாஸ்கர் , சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் கமாலுதீன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் க.சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி.எஸ்.கண்ணன், எம்.ராகவன் , பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் கோ.உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலர் சிவ.காமராஜ், நகரத் தலைவர் ஆர்.ரகுராமன், நகரச் செயலர் யு.கோகுல் உள்ளிட்ட நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முக்கிய வீரர்களின்றி டி20 தொடருக்காக பாகிஸ்தான் சென்றடைந்த ஆஸ்திரேலிய அணி!

அஜீத் பவார் மரணம்! சர்ச்சையாக்கும் மமதா பானர்ஜீ! | Maharashtra | Plane Crash

அபார வெற்றியுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை தொடங்கிய தென்னாப்பிரிக்கா!

ஆஸி. மகளிரணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை முர்முவின் உரை பிரதிபலிக்கிறது: பிரதமர்!

SCROLL FOR NEXT