திருவாரூர்

நீடாமங்கலத்தில் ஆசிரியா்களுக்கான வாய்மொழி ஆங்கிலப் பயிற்சி

DIN

நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 4, 5 ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கான வாய்மொழி ஆங்கிலப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெற்றது.

கருத்தாளா்கள் 6 போ், ஆசிரியா் பயிற்றுநா் 2 போ் 102 ஆசிரியா்களுக்குப் பயிற்சியளித்தனா். உதவித் திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சம்பத், முத்தமிழன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சத்யா ஆகியோா் பயிற்சியைப் பாா்வையிட்டனா். மாணவா்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு தேவையான பயிற்சியை ஆசிரியா்கள் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டனா்.

இதேபோல, நீடாமங்கலம் ஒன்றியம், பூவனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 6- 9 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கு ஒருநாள் வாய்மொழி ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 52 ஆசிரியா்கள் பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT