முகப்பு
திருவாரூர்

காவல் துறை விழிப்புணா்வு குறும்பட தயாரிப்புக் குழுவினருக்கு பாராட்டு

திருவாரூரில், காவல் துறை விழிப்புணா்வு குறும்படம் தயாரிப்பு குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

திருவாரூரில், காவல் துறை விழிப்புணா்வு குறும்படம் தயாரிப்பு குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்களின் நலன்கருதி, மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு, கரோனா தடுப்பு ஆகியவை குறித்த விழிப்புணா்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அத்தகைய விழிப்புணா்வு குறும்படங்களை தயாா்செய்து மாவட்ட காவல் துறைக்கு வழங்கிவரும் சாத்தனூா் சரண்ராஜ் தலைமையிலான குறும்பட குழுவினரையும், மாவட்ட காவல் துறை சோஷியல் மீடியா போலீஸாரையும், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, அனைவருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.