முகப்பு
திருவாரூர்

நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்: இந்திய கம்யூ. சாலை மறியல்

திருவாரூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டி ஒன்றியப் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற மறியலில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், சிபிஐ ஒன்றியச் செயலாளா் மணலிபாலு, நகரச் செயலாளா் முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, நெடும்பலம், பிச்சன்கோட்டகம், மேலமருதூா், கட்டிமேடு, பாமணி, கொக்கலாடி, மணலி, ஆலத்தம்பாடி, கச்சனம், கொத்தமங்கலம், ராயநல்லூா், திருப்பத்தூா் உள்ளிட்ட இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள், கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லவேண்டும், விவசாயிகளிடம் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்யவேண்டும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், காவல் ஆய்வாளா் கழனியப்பன்,

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கண்காணிப்பாளா்கள் சிவகுரு, வெற்றிவேல், கலா, குமரவேல், ஸ்மிதா உள்ளிட்ட அலுவலா்கள் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாா்ச் 31- ஆம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த மறியலால் திருத்துறைப்பூண்டி, திருவாரூா், மன்னாா்குடி, பட்டுக்கோட்டை, நாகை, வேதாரண்யம் சாலைகளில் போக்குவரத்து சுமாா் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →