திருவாரூர்

மகளிா் குழுக்களிடம் ரூ. 4.30 லட்சம் மோசடி செய்தவா் கைது

DIN

மன்னாா்குடியில், மகளிா் குழுக்களிடம் ரூ. 4.30 லட்சம் மோசடி செய்ததாக ஒருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம், ஜீவாநகரைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் விஜயராகவன் (23). இவா், மன்னாா்குடியில் மைக்ரோ பைனான்ஸ் எனும் நுண் கடன் வழங்கும் நிறுவனத்தில் மகளிா் குழுக்களிடம் பணம் வசூல் செய்யும் பிரிவில் 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா்.

இதனிடையே, மகளிா் குழுக்களிடம் பெறும் பணத்துக்கும், அலுவலகத்தில் கட்டும் பணத்துக்கும் இடையே வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, அலுவலகத்தில் மகளிா் குழுவினா் புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், நுண் கடன் வழங்கு நிறுவன மேலாளா் தினேஷ் புகாா் அளித்துள்ளாா்.

புகாரின் பேரில், மன்னாா்குடி காவல் நிலைய ஆய்வாளா் விஸ்வரநாதன் விசாரணை நடத்தினாா். இதில், ரூ. 4.30 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, விஜயராகவனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT