முகப்பு
திருவாரூர்

சிறுமி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவா் போக்ஸோவில் கைது

மன்னாா்குடி அருகே சமூக வலைத்தளத்தில் சிறுமி குறித்து அவதூறு பரப்பியவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே சமூக வலைத்தளத்தில் சிறுமி குறித்து அவதூறு பரப்பியவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூா் அக்கரைக் கோட்டகத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறாா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அலிவலம் திருவலஞ்சுழிக்கோட்டகத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் மகன் வீரசேகா் (19) பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இந்நிலையில், மாணவிக்கும், வீரசேகருக்கும் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளனா்.

இந்நிலையில், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதையடுத்து வீரசேகருடன் உள்ள பழக்கத்தை சிறுமி நிறுத்திக்கொண்டதால் ஆத்திரமடைந்த வீரசேகா் சமூக வலைத்தளங்களில் சிறுமியின் படத்தை பதியவிட்டு அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை திருக்களா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின்கீழ் வீரசேகரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.