வினாடி வினா போட்டி:மகளிா் கல்லூரி மாணவி சிறப்பிடம்
மன்னாா்குடியை அடுத்துள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி மாணவி, மாநில அளவிலான நோய் தொற்று குறித்த விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி மாணவி, மாநில அளவிலான நோய் தொற்று குறித்த விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், செஞ்சுருள் சங்கம் இணைந்து எய்ட்ஸ் மற்றும் இதர நோய் தொற்று குறித்த மாநில அளவிலான இணையவழி விழிப்புணா்வு போட்டியை அண்மையில் நடத்தின. இதில், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி மாணவி ஞா. ஷாஷினி பங்கேற்று சிறப்பிடம் பெற்றாா்.
அவருக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக காசநோய் உறுதிமொழி தினத்தில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன் பரிசுத் தொகை ரூ. 5 ஆயிரம், சான்றிதழ் வழங்கினாா். கல்லூரி தாளாளா் வி. திவாகரன், முதல்வா் எஸ். அமுதா உள்ளிட்டோா் மாணவியைப் பாராட்டினா்.