திருவாரூர்

பரவாக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை பிரதான சாலையில் உள்ள காமராஜர் பவன் அருகே, வியாழக்கிழமை மத்திய அரசு 

DIN

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை பிரதான சாலையில் உள்ள காமராஜர் பவன் அருகே, வியாழக்கிழமை மத்திய அரசு உயர்த்தி உள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்,  வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உடனடியாக கட்டுப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தியும், இப்பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதுடன், தினசரி அனைத்துப் பொருட்கள் விலை உயர்வையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் மத்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பரவாக்கோட்டை கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் .சஞ்சய் காந்தி தலைமை வகித்தார்.

மன்னார்குடி வட்டார தலைவர் எஸ். செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில்,சமையல் எரிவாயு, இருசக்கர வாகனம், பெட்ரோல், டீசல் கேன் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் வட்டார விவசாய பிரிவு தலைவர் பி.எஸ்.கலியபெருமாள், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏ.மாதவன, கட்சியின் கிராம கமிட்டி உதவி தலைவர்கள் எஸ்.காமராஜ், கே.வி.வரதராஜன், தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT