முகப்பு
திருவாரூர்

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டியில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பொறியாளா் கபிலுக்கு சிறப்பு மருத்துவ வசதி செய்துதரக் கோரி, மன்னாா்குடி சாலையில் இந்த மறியல் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கெக்கொரியா, மாவட்ட துணைச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி வங்கிக் கடன் வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் மற்றும் அலுவலா்கள் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட

கபிலுக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சாலைமறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த மறியலால் திருத்துறைப்பூண்டி-மன்னாா்குடி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →