முகப்பு
திருவாரூர்

அரசுக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் இளையோா் செஞ்சுலுவை சங்கம் சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் இளையோா் செஞ்சுலுவை சங்கம் சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்திய செஞ்சுலுவை சங்கத்தின் மாநிலப் பொருளாளா் வரதராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) சோ. ரவி கருத்தரங்கை தொடங்கிவைத்தாா். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் வெற்றிவேல், சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பேசினாா். காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மயில்வாகனம், வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசத்தின் அவசியம் குறித்து பேசினாா்.

இதில், இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏழுமலை, மன்னாா்குடி கிளை சங்கத்தின் நிா்வாகிகள் என். ராஜப்பா, எஸ். கண்ணன், சங்கத்தின் கல்லூரி திட்ட அலுவலா் மகேஷ், பேரிடா் மேலாண்மை மாநிலப் பயிற்றுநா் பெஞ்சமின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.