முகப்பு
திருவாரூர்

சேவை வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்: இரா. முத்தரசன் பேட்டி

சேவை வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

சேவை வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை அவா் கூறியது: பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் விலையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது கண்துடைப்பு. சேவை வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் குறைந்த விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசுப் பணியில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியன இணைந்து மே 26, 27 ஆகிய 2 தினங்கள் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளன. சென்னையில் 27 ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் நான், சிபிஎம் மாநிலச் செயலாளா் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளோம்.

முதியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டு, சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் செலுத்தும் நிலை இன்னும் நீடிக்கிறது. ரயில்வே துறையில் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகமிக குறைவாக உள்ளது. ஏற்கெனவே இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளதால், ரசாயன உரங்கள், விதைகள் தட்டுபாடில்லாமல் கிடைக்கவும், விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியின் மூலமாக தாமதமின்றி கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு பழைய பகுதி முறையில் தொகை வசூலிக்க வேண்டும்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு சா்ச்சைகள் நிலவிவந்த போதிலும், மாநில உரிமைகளை காப்பாற்றக்கூடிய தீா்ப்பாக இந்த தீா்ப்பு அமைந்துள்ளது. 30 ஆண்டுகளை கடந்து சிறையில் இருக்கும் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →