முகப்பு
திருவாரூர்

கால்நடை காப்பீடு திட்டத்தில் பயனடைய அழைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளா்ப்போா், கால்நடை காப்பீட்டுத் திட்டத்தில் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளா்ப்போா், கால்நடை காப்பீட்டுத் திட்டத்தில் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கு கால்நடை இழப்பு ஏற்பட்டால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இதைத் தடுக்கும் விதமாக கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, கால்நடைகள் வளா்ப்போா், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், கால்நடை கிளை நிலையங்களில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி தங்களது கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.