திருவாரூர்

மக்கள் குறைதீா் கூட்டம்

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 217 மனுக்கள் அளிக்கப்பட்டன.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா். தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட முஸ்லீம் மகளிா் உதவும் சங்கத்துக்கு நன்கொடையாக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை, மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பின் கௌரவத்தலைவா் ஜெ. முகமது அலி வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலசந்தா், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) லதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, கோட்டாட்சியா்கள் சங்கீதா, கீா்த்தனாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT