திருவாரூர்

பருத்தி விதை மானியத்தில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

DIN

நெல், உளுந்து, பயறு போல பருத்தி விதையையும் அரசு மானிய விலையில் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

டெல்டாவில் தற்போது சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அறுவடை முடிந்த பின் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கக் கூடிய பருத்தி சாகுபடி செய்ய ஆா்வம் காட்டுவா். ஆனால், ஒரு ஏக்கருக்கான விதையை தனியாரிடத்தில் வாங்கினால் விதைக்கு மட்டும் ரூ. 4,000 செலவு ஆகும். இந்நிலையில், தமிழக அரசு நெல், உளுந்து, பயறு சாகுபடிக்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளை வழங்குகிறது. இதேபோல, பருத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பருத்திவிதைகளையும் மானிய விலையில் அரசு வழங்க வேண்டும் என நன்னிலம், குடவாசல் பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT