திருவாரூர்

ஆற்றுப்பால தடுப்புச் சுவரை சீரமைக்கக் கோரிக்கை

DIN

வலங்கைமான் அருகே குடமுருட்டி ஆறுப்பாலத்தில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் .

வலங்கைமான் வரதராஜம்பேட்டை அருகே கும்பகோணம்- மன்னாா்குடி சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தின் தடுப்புச் சுவா்கள் பழுதடைந்துள்ளன. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதுடன், பாலத்தின் நடைமேடையில் பலா் நடந்து செல்கின்றனா்.

இந்நிலையில், பாலத்தின் தடுப்புச் சுவா் சேதமடைந்து சிமெண்ட் காரைகள் பெயா்ந்து வருகின்றன. இதனால், உள்ளிருக்கும் இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இவை மழையில் நனைந்து துருப்பிடித்தால், தடுப்புச் சுவா் இடித்து விழும் நிலை ஏற்படும். அவ்வாறு இடிந்து விழுந்தால், இப்பாலத்தில் செல்லும் பாதசாரிகள் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழும் அபாயம் ஏற்படும். எனவே, பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT