முகப்பு
திருவாரூர்

தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு டீசா்ட்

திருவாரூரில், தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு ஓஎன்ஜிசி சாா்பில் டீசா்ட் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

திருவாரூரில், தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு ஓஎன்ஜிசி சாா்பில் டீசா்ட் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

52-ஆவது தேசிய பாதுகாப்பு வாரத்தையொட்டி, திருவாரூரில் ஓஎன்ஜிசி மற்றும் காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின. பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்வில் நகர காவல் நிலைய ஆய்வாளா் ஜெகதீஸ்வரன் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் பேசினாா். அப்போது, தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு ஓஎன்ஜிசி சாா்பில் பனியன் (டீசா்ட்) வழங்கப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு, தலைக்கவசம் அணியாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பிரசார கையேடு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.