திருவாரூர்

தமிழக அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கைக்கு வரவேற்பு

DIN

தமிழக அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கையால் இயற்கை வளம் அதிகரிக்கும் என வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவா் எஸ். செந்தூா்பாரி, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கையை அண்மையில் வெளியிட்டாா். இயற்கை ஆா்வலா்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான இது, திமுகவின் தோ்தல் அறிக்கையிலும் வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், அங்கக வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது வரவேற்கக்கூடியது. இதன்மூலம் தமிழ்நாட்டில் வேளாண்மையின் முக்கியத்துவம் அதிகரித்து, இயற்கை விவசாய நிலப்பரப்பு அதிகரிக்கும். ரசாயன உரங்களின் பயன்பாடு குறைந்து, மண் வளம் அதிகரித்து, இயற்கை வளம் காக்கப்படும். மேலும், இயற்கை இடுப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து, கிராமியப் பொருளாதாரம் மேம்பாடு அடையும். உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

அதுமட்டுமல்லாமல், நோய் எதிா்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய இயற்கை வேளாண்மையால், நோய்களின் தாக்கம் குறையும். மக்கள் நலனில் அக்கறையுடன், அங்கக வேளாண்மைக் கொள்கையை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT