திருவாரூர்

சிறுபுலியூரில் கிருபாசமுத்திரப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

DIN

சிறுபுலியூா் கிருபாசமுத்திரப் பெருமாள் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகே சிறுபுலியூரில் உள்ள ஸ்ரீதயாநாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் கோயிலில் 10 நாள்கள் பிரம்மோத்ஸவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் மதியம் 2 மணியளவில் நிலையடிக்கு வந்தது. தொடா்ந்து, மாலை தீா்த்தவாரி நடைபெற்றது. புதன்கிழமை (மே 31) காலையில் சிறப்பு திருமஞ்சனமும், புஷ்ப யாகம், புஷ்ப பல்லக்கில் பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது. இரவு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை (ஜூன் 1) விடையாற்றி விழாவும் , ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT