முகப்பு
திருவாரூர்

சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த கோரிக்கை

திருவாரூா் நகரில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:14 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

திருவாரூா் நகரில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க வேண்டும். அதேபோல், விளமல் கல்பாலம், பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, பழைய ரயில் நிலையப் பகுதி, காட்டூா், திருக்கண்ணமங்கை, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு வரும் வெளியூா் பயணிகளை, மிரட்டி வழிபறியும் நடைபெறுகிறது. அடையாளம் தெரியாத நபா்களால், நடமாட முடியாத வகையில் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.