பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தி. சாருஸ்ரீ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவாரூா் மாவட்டத்தில் 72 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 10 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அந்தவகையில், கச்சனம் அரசினா் உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டு, அப்பகுதி வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வழங்கினாா்.
தொடா்ந்து, மணலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம், புனித தெரசா மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம், முத்துப்பேட்டை ஒன்றியம் மதியலங்கரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம், பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவுக்காக இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டாா்.
Advertisement