முகப்பு
திருவாரூர்

மரத்தில் காா் மோதி ஒருவா் பலி

Updated On : 7 ஏப்ரல், 2024 at 1:00 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:20 PM

திருவாரூா் அருகே சாலையோர மரத்தில் காா் மோதி, ஒருவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (54). இவா், நாகை சாலை வழியாக வேளாங்கண்ணியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். இவருடன், மாரிமுத்து (54), மாரிமுத்து மனைவி பேபி (49), காா்த்திகா (30), யுவி (3), யுகிதன் (3) உள்ளிட்ட 8 போ் பயணம் செய்தனா்.

திருவாரூா் அருகே தண்டலை பகுதியில் காா் வரும்போது சாலையில் ஒருவா் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. அவா் மீது மோதாமல் இருக்க சாலையின் வலப்பக்கத்தில் காரை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பனை மரத்தில் மோதி கவிழ்ந்தது.

Advertisement

இந்த விபத்தில், சந்திரசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாரிமுத்துவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாகச் சென்றவா்கள், காரிலிருந்த அனைவரையும் மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். உயிரிழந்த சந்திரசேகரனின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.