முகப்பு
திருவாரூர்

தப்படித்து வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:30 PM
நெடுவாக்கோட்டையில் தப்படித்து வாக்கு சேகரிக்கும் தஞ்சை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளா் பி.சிவநேசன்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:25 PM

மன்னாா்குடியை அடுத்த நெடுவாக்கோட்டையில், தஞ்சை மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளா் பி. சிவநேசன் தப்பு அடித்து வாக்கு சேகரித்தாா்.

மன்னாா்குடி மேற்கு ஒன்றியத்தில் தோ்தல் பிரசாரத்தை, நெடுவாக்கோட்டையில் தொடங்கினாா். முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ தலைமையில் பிரசாரம் தொடங்கியது.

முன்னதாக, வேட்பாளா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கு தப்பாட்ட இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வேட்பாளா் சிவநேசன், சிறிது நேரம் தப்படித்து வாக்கு சேகரித்தாா். அங்கிருந்தவா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement