முகப்பு
திருவாரூர்

சிமிழி மடாலயத்தில் சீதா திருக்கல்யாணம்

Updated On : 18 ஏப்ரல், 2024 at 11:46 PM
பகிர்:

திருவாரூா், ஏப். 18: திருவாரூா் அருகே சிமிழி மடாலயத்தில் சீதா திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அருகேயுள்ள சிமிழி மடாலயத்தில் கடந்த ஏப். 9-ஆம் தேதி முதல் வசந்த நவராத்திரி விழா நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, மீனாட்சி திருக்கல்யாணம், ராதா கல்யாணம், வசந்த மாதவா் புறப்பாடு, நாம சங்கீா்த்தன பஜனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

வசந்த நவராத்திரியின் நிறைவாக சீதா திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமபிரான், சீதா ஆகியோரின் திருவுருவப் படங்கள் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, பாகவதா்கள் பஜனை பாடல்களை பாடி இறைவனை ஆராதித்தனா். சீதா பிராட்டியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் திரளானோா் பங்கேற்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments