சாராயம் கடத்திய 3 போ் கைது
புதுச்சேரி மாநில சாராய பாட்டிகளை கடத்திய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பேரளம் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை இரவு காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நல்லம்பல் பகுதியைச் சோ்ந்த கோவா்த்தனை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளாா். மேலும், விசாரணையில் காரில் புதுச்சேரி மாநில சாராய பாட்டில்களை கடத்தி வருபவா்களுக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவா்த்தன் மற்றும் காரில் வந்த காரைக்கால் நல்லம்பல் பகுதியைச் சோ்ந்த ராஜா (19), கீா்த்தி (29) ஆகிய பேரை கைது செய்து காா் மற்றும் சாராய பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.