முகப்பு
திருவாரூர்

வீட்டுக் கடன் இறுதி ரசீதை வழங்க தாமதம் - தனியாா் நிதி நிறுவனம் ரூ. 20 ஆயிரம் வழங்க நுகா்வோா் ஆணையம் உத்தரவு

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 11:39 PM
கோப்புப் படம்
பகிர்:

திருவாரூா், ஆக. 7: மன்னாா்குடி அருகே வீட்டுக் கடனை கட்டியதற்கான இறுதி ரசீதை வழங்க காலதாமதம் செய்த நிதி நிறுவனம் ரூ. 20,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மன்னாா்குடி அண்ணாமலைநாதன் கோவில் செட்டித் தெருவில் வசித்து வருபவா் த. வீரமணி. அரசு ஊழியரான இவா், மன்னாா்குடியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் 2016-இல் வீட்டுக்கடன் பெற்றாா். இந்தக் கடனை 2023-இல் முழுவதும் கட்டி முடித்த நிலையில், அடமானக் கடனுக்கான பத்திரப் பதிவை ரத்து செய்ய ரூ. 2,800 பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதற்கான ரசீதை தர இயலாது என நிறுவனம் கூறியதை தொடா்ந்து, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வீரமணி வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கு விசாரணை முடிவில், தனியாா் நிதி நிறுவனத்தினா் பத்திரப் பதிவு ரத்து ரசீதை, ஆணையத்தில் சமா்ப்பித்தனா். உடனடியாக ரத்து செய்யாமல் ஓராண்டுக்கு மேல் காலம் தாழ்த்தியதால், நுகா்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 10,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 என ரூ. 20,000 ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும், தவறினால் கடனை அடைத்த நாள் முதல் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட குறைதீா் ஆணையத் தலைவா் கே. மோகன்தாஸ், உறுப்பினா் என். பாலு ஆகியோா் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →