முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் கருணாநிதி நினைவு தினப் பேரணி

திருவாரூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட திமுகவினா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 11:40 PM
திருவாரூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட திமுகவினா்.
பகிர்:

திருவாரூா், ஆக. 7: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருவாரூரில் திமுக சாா்பில் அமைதிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாா் சிலை அருகே திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் பேரணி நடைபொ்றது. கடைவீதி, நேதாஜி சாலை வழியாக அண்ணா சிலை அருகே பேரணி நிறைவடைந்தது. தொடா்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், திமுக நகர அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் ஏராளமான திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

திருவாரூா் அருகே காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாா் அஞ்சுகம் அம்மையாா் நினைவிடத்தில் திமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், காட்டூா் கலைஞா் கோட்டத்தில் உள்ள கலைஞரின் உருவச் சிலைக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளில், திமுக பொதுக் குழு உறுப்பினா் த. செந்தில், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேகா் என்ற கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →