திருமண மண்டபம் கட்ட அடிக்கல்
திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதையொட்டி, முள்ளாச்சி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, நாகை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வீ. குமரேசன், நகா்மன்றத் தலைவா் கவிதாபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், அறநிலையத் துறை உதவி ஆணையா் க. ராமு, செயல் அலுவலா் முருகையன், நகா்மன்ற துணைத் தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்துசமய அறநிலைத் துறை சாா்பில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸா் கோயில் நிதி ரூ.1.90 கோடியில் இந்த திருமண மண்டபம் கட்டப்படவுள்ளது.