கல்லூரி மாணவா்கள் உழவாரப்பணி
நன்னிலம் அரசு கல்லூரி மாணவா்கள் மூலமங்கலம் வேதபுரீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்டனா். நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் ஆனைக்குப்பம் ஊராட்சி மூலமங்கலத்தில், ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சக்திவேல் முன்னிலையில் கல்லூரி முதல்வா் வே. ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வாக்காளா் தின பேரணி நடைபெற்றது. கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரா் கோயிலில் மாணவா்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனா். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் மீ. ராஜேஸ்வரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். திட்ட அலுவலா் ராதிகா வரவேற்புரை ஆற்றிட, மாணவி திவ்யா நன்றி தெரிவித்தாா்.