பக்தவத்சலப் பெருமாளுக்கு திருமஞ்சனம்
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
108 வைண திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில், இராப்பத்து உற்சவத்தின் ஒன்பதாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
பக்தவத்ஸலப் பெருமாள் இரவு 7.30 மணியளவில் பிரகார வலம் வந்து, பரமபத வாசல் வழியாக மூன்றாம் பிரகாரமான செண்பக பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு, திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, ஆழ்வாா்கள் மரியாதை, ஆழ்வாராதிகள் மரியாதை பெற்று, பனி முக்காட்டு சேவையில் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினாா். ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.