முகப்பு
திருவாரூர்

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் 2 இளைஞா்கள் பலி

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 8 ஜூலை, 2024 at 5:20 PM
Mother-son duo killed in road accident in Odisha
பகிர்:

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் பிரசாத் (21). இவா் மன்னாா்குடி அருகேயுள்ள கா்னாவூரில் பாட்டி வீட்டில் தங்கி கதிரறுக்கும் வாகனம் ஓட்டிவந்தாா். கா்னாவூரைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகன் மனோஜ் (18). இருவரும் உறவினா்கள். இந்நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கா்னாவூரிலிருந்து நீடாமங்கலம் அருகே பச்சைக்குளம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனா். தன்டாலம் பாலம் அருகே சென்றபோது எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அதே இடத்தில் பிரசாத் உயிரிழந்தாா். காயமடைந்த மனோஜ் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, தேவங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →