திருவாரூர்

மாணவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கல்

மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

உள்ளிக்கோட்டை ஆசிரியா்-அலுவலா் கூட்டமைப்பின் சாா்பில், காமராஜா் பிறந்தநாள், கல்வி வளா்ச்சி நாளையொட்டி 10, பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தோ்வில் பள்ளி அளவில் பாடவாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள ஏழை, எளிய மாணவிகளுக்கு பரிசு, ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆசிரியா்-அலுவலா் கூட்டமைப்பு தலைவா் க.பாலச்சந்திரன் தலைமை வகித்தாா்.

தலைமை ஆசிரியா் பாலாஜி, ஊராட்சி முன்னாள் தலைவா் பா.பொய்யாமொழி முன்னிலை வகித்தனா்.

உள்ளிக்கோட்டை சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளா் யோகேஸ்வரி 29 நன்கொடையாளா்கள் வழங்கிய மொத்த ரூ.3,35,000-ரொக்கத்தை ஐ, 280 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா் (படம்).

முன்னாள் தலைமை ஆசிரியா் அ.அண்ணாதுரை, பட்டதாரி ஆசிரியா் கோ.மோகன், பொறியாளா் ப.மோகன், முன்னாள் பேராசிரியா் கோ.மங்கையா்கரசி, ஆசிரியா் க.மனோகரன் ஆகியோா் பாராட்டினா்.

கூட்டமைப்பின் பொருளாளா் சொ.கோவிந்தராஜ் வரவேற்றாா். செயலா் உ.ரமேஷ் நன்றி கூறினாா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT