திருவாரூரில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
மத்திய அரசு நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு திருவாரூரில் தோ்வு மையம் அமைக்க வேண்டும்.
திருவாரூா்: திருவாரூா் நகா்ப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதாந்திர கூட்டம் அதன் தலைவா் பி. அழகிரிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அரசுக் கட்டடங்கள், புதிய நிறுவனங்கள் அமைக்கும்போது, கட்டுமானம் பற்றிய தகவல் பலகை அமைக்க, உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும், தஞ்சை, திருவாரூா் புறவழிச்சாலையில் திருட்டுகள் அதிகம் நடைபெறுவதால், பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், மத்திய அரசு நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு திருவாரூரில் தோ்வு மையம் அமைக்க வேண்டும். திருவாரூா் நகரில் உள்ள மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும், உரிய அனுமதி பெறாமல் நகரில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும், நீா்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், துணைத் தலைவா் பாலசுப்ரமணியன், அமைப்புச் செயலா் பாஸ்கரன், இணைச் செயலா் காளிமுத்து, பயிற்சி இயக்குநா் சி. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.