மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்
மொத்தம் ரூ. 16.98 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைக்கப்பட்டன.
திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை, மக்கள் பயன்பாட்டுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்வில், கேத்லேப் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ரூ. 8.48 கோடியிலும், எம்ஆா்ஐ ஸ்கேன் ரூ. 8.50 கோடி என மொத்தம் ரூ. 16.98 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைக்கப்பட்டன.
Advertisement