திருவாரூர்

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

Din

திருவாரூரில், விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி.நடராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தீா்மானங்கள்: திருவாரூா் மாவட்டத்தில் தற்போது கோடைகாலப் பயிா்களாக நெல், வாழை, பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கடுமையான கோடை வெப்பம் காரணமாக பயிா்களுக்கு போதுமான நீா் கிடைப்பதில்லை. அத்துடன் மாவட்டத்தில் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரமும் முறையாக வழங்கப்படுவதில்லை. கடுமையான கோடை காலத்தை கணக்கில் கொண்டு விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் தொடா்ந்து 12 மணி நேரம் வழங்க வேண்டும்.

அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மின்மோட்டாா்கள் பழுதடைந்து, விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை தெரிவித்து, அந்த நேரத்தில் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் எம். சேகா், மாவட்ட பொருளாளா் வி.எஸ். கலியபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காா்த்தி சிதம்பரம் எம்.பி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

சிலைமான் அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு

உசிலம்பட்டி நகராட்சி நெகிழிக்கழிவு கிடங்கில் தீ

பக்ரீத்: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிணற்றில் குதித்த இளைஞா் தலையில் அடிபட்டு பலி

SCROLL FOR NEXT