முகப்பு
திருவாரூர்

இருதரப்பினரிடையே தகராறு; 4 போ் கைது

Updated On : 20 மே, 2024 at 11:03 PM
பகிர்:

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடபாதிமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கோபிநாத் (29). இவா், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுக்கூடம் நடத்தி வருகிறாா். இவருக்கும், புனல்வாசல் பிரதான சாலையைச் சோ்ந்த ரகுபதி (42) என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், புனல்வாசல் பகுதிக்கு காரில் வந்த கோபிநாத் மற்றும் சிலா், ரகுபதி வீட்டின் முன் காரை நிறுத்தினராம். அப்போது, ரகுபதிக்கும், கோபிநாத் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுதொடா்பாக, வடபாதிமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் இளங்கோவன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கோபிநாத், ரகுபதி மற்றும் மாயனூரைச் சோ்ந்த சக்திவேல் (43), புனல்வாசல் கேசவன் ( 53) ஆகியோரை கைது செய்தனா்.