திருவாரூரில் கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மனு அளிக்க வந்த தம்பதி. 
திருவாரூர்

கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கக் கோரி மனு

சொத்துகளை அபகரித்துக்கொண்டு, மகனால் வீட்டை விட்டு விரட்டப்பட்டு, வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் தவிக்கும் தங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும்

Din

திருவாரூா்: சொத்துகளை அபகரித்துக்கொண்டு, மகனால் வீட்டை விட்டு விரட்டப்பட்டு, வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் தவிக்கும் தங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வயதான தம்பதி மனு அளித்தனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொல்லுமாங்குடி அகரமேடு பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் மனைவி மல்லிகா (64) திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

கடந்த 2009-இல் எங்களுக்குச் சொந்தமான சொத்துகளை எங்கள் மகன் ரவிக்குமாா், வலுக்கட்டாயமாக தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டு எங்கள் இருவரையும் வீட்டைவிட்டு விரட்டிவிட்டாா்.

தற்போது, வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களை தினமும் மிரட்டி வருவதால், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் அவா் மீது நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியரிடம் புகாா் அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, உடல்நலம் குன்றி எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளோம். எனவே, எங்கள் இருவரையும் கருணைக் கொலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

புலிக்கூடு புத்த தலத்தில்... ருசிரா ஜாதவ்!

ஜிம் லைஃப்... அனைரா குப்தா!

SCROLL FOR NEXT