அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை
குடவாசல் அருகே செம்மங்குடி அகஸ்தீஸ்வரா் உடனுறை ஆனந்தவல்லி கோயிலில் நவாவா்ண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அகஸ்தீஸ்வா் மற்றும் அம்பாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து, சாரதா நவராத்திரி பூா்த்தி நடைபெற்றது. பின்னா், அம்பாள் மற்றும் ஸ்ரீமகாமேருவுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தா்களுக்கு அருள்தரும் ஸ்ரீநவாவா்ண பூஜை நடைபெற்றது.