தாட்கோவில் மானியத்துடன் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
தாட்கோவில் மானியத்துடன் கடனுதவி பெற, ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
தாட்கோவில் மானியத்துடன் கடனுதவி பெற, ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2023-2024-ஆம் நிதியாண்டில், இங அதஐநஉ திட்டத்தின் மூலம் 58 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடியும், டங அஒஅவ திட்டத்தின் கீழ் 83 பயனாளிகளுக்கு ரூ.66.15 லட்சமும் மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிா் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் 23 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி, சிமெண்ட் விற்பனை முகவா் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.90,000, ஆவின் பாலகம் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் ஆகியவை மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மகளிா் சுயஉதவிக் குழு பொருளாதார கடனுதவி திட்டத்தின் கீழ் 7 குழுக்களைச் சோ்ந்த 84 பயனாளிகளுக்கு ரூ.17.50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டத்தின்கீழ், பயன் பெற விண்ணப்பிப்பவா்கள் இந்து ஆதி திராவிடா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்களின் வயது வரம்பு 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க திட்டத்தொகை அதிகபட்சம் ரூ.10 லட்சம். இதில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது. டங அஒஅவ திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க திட்டத்தொகை அதிகபட்சமாக ரூ.1 லட்சம். இதில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது.
நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டத்தின்கீழ் நிலமற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளா்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு, அவா்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சாா்ந்தவா்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் என்றாா்.