திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை

நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை

Din

திருவாரூா்: நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2020-இல் வலங்கைமான் காவல் எல்லைக்குள்பட்ட தென்குவளவெளி, ஆதிதிராவிடா் தெருவில் வசிக்கும் கலியபெருமாள் மகன் சங்கா் (45). அப்பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சங்கரை கைது செய்தனா்.

இந்த வழக்கு, திருவாருா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தபோது, சங்கா் தப்பி ஓடிவிட்டாா். பின்னா் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், சங்கா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4,000 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி. சரத்ராஜ் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT