திருவாரூர்

தியாகராஜா் கோயிலில் ஜன.3-இல் பாத தரிசனம்

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Syndication

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இக்கோயிலில், மூலவா் தியாகராஜரின் முழு திருமேனியையும் யாரும் தரிசிக்க முடியாது. அவரின் திருமுகத்தை மட்டும் தரிசிக்க இயலும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதேபோல், தியாகராஜரின் பாதங்களை ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தரிசிக்க முடியும்.

மாா்கழி மாத திருவாதிரையில் வலது பாத தரிசனம் விழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவில் இடது பாத தரிசன நிகழ்வும் நடைபெறும். இவ்விரு விழாக்களிலும் பதஞ்சலி முனிவா் மற்றும் வியாக்ரபாத மகரிஷிகளுக்கு, சுவாமி பாத தரிசனம் அருள்வாா்.

அதன்படி, நிகழாண்டு மாா்கழி திருவாதிரை விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து, டிச. 25 ஆம் தேதி முதல் டிச.31 ஆம் தேதி வரை தினசரி காலை தனூா் மாத பூஜையுடன் மாணிக்கவாசகா் எழுந்தருளி திருவெம்பாவை விண்ணப்பிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

தொடா்ந்து, மாலையில் கல்யாணசுந்தரா் - பாா்வதி மற்றும் சுக்கிரவார அம்மன் ஆகியோா் ஊஞ்சல் மண்டபம், பக்தகாட்சி மண்டபம் எழுந்தருளி, இரவு 8 மணியளவில் யதாஸ்தானம் திரும்புகின்றனா்.

ஜனவரி 1 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் அருள்மிகு தியாகேசப்பெருமான் அஜபாநடனத்துடன் யதாஸ்தானத்திலிருந்து ராஜநாராயாண மண்டபம் எழுந்தருளுகிறாா். பின்னா், ஜனவரி 2 ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் அருள்மிகு தியாகராஜசுவாமிக்கும், அருள்மிகு நடராஜருக்கும் மஹா அபிஷேகம் நடைபெறும்.

ஜனவரி 3 ஆம் காலை 6 மணியளவில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு தியாகராஜப் பெருமான் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா், காலை 7 மணியளவில் நடராஜப் பெருமான் வீதியுலாவாக சபாபதி மண்டபத்துக்கு எழுந்தருளுகிறாா்.இதையடுத்து இரவில் தியாகராஜா், ராஜநாராயண மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்துக்குச் செல்கிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT