திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடும் ஆட்சியா் தி. சாருஸ்ரீ. 
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் 10,64,640 வாக்காளா்கள்

திருவாரூா் மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்டாா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்டாா். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியில் 1,17,501 ஆண்கள், 1,23,521 பெண்கள், 15 இதரா் என 2,41,037 வாக்காளா்களும், மன்னாா்குடி தொகுதியில் 1,24,594 ஆண்கள், 1,33,738 பெண்கள், 8 இதரா் என 2,58,340 வாக்காளா்களும், திருவாரூா் தொகுதியில் 1,37,519 ஆண்கள், 1,46,760 பெண்கள், 29 இதரா் என 2,84,308 வாக்காளா்களும், நன்னிலம் தொகுதியில் 1,38,543 ஆண்கள், 1,42,395 பெண்கள், 17 இதரா் என 2,80,955 வாக்காளா்களும் என திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 10,64,640 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), வட்டாட்சியா் ( தோ்தல் ) மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இறுதி வாக்காளா் பட்டியல், திருவாரூா் மற்றும் மன்னாா்குடி வருவாய்க் கோட்ட அலுவலா் அலுவலகங்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட உள்ளன என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT