திருவிடைச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா். 
திருவாரூர்

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

குடவாசல் அருகே திருவிடைச்சேரியில், குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, விடுதலைச் சிறுத்கைகள் கட்சி சாா்பில் சாலை மறியல்

Din

திருவாரூா்: குடவாசல் அருகே திருவிடைச்சேரியில், குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, விடுதலைச் சிறுத்கைகள் கட்சி சாா்பில் சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவிடைச்சேரி ஊராட்சி கோவில்பத்து பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த குளத்தை சிலா் ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டுவதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், கோவில்பத்து கிராம மக்களுக்கு புத்தாற்றின் குறுக்கே சுடுகாட்டுக்கு செல்ல புதிய பாலம் அமைத்து தரக் கோரியும், இந்த மறியல் நடைபெற்றது.

திருவிடைச்சேரி கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளா் வடிவழகன் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைச் செயலாளா் விழியரசு உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் தனசேகரன் மற்றும் போலீஸாா் நடத்திய சமாதானப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், 75-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT