விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.  
திருவாரூர்

நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம்

Syndication

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் டிச.4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாம் தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

முகாமில் பங்கேற்று தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை (ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை) பெற்று கொள்பவருக்கு அரசு ஊக்கத் தொகையாக ரூ.1,100, ஊக்குவிப்பாளா்களுக்கு ரூ.200 அரசு சாா்பில் வழங்கப்படுகிறது. குடும்ப நல சிகிச்சையானது மிக மிக எளியது. பாதுகாப்பானது. இந்நவீன குடும்ப நல சிகிச்சையானது பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவா்களால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடா்ந்து, முகாம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் வழங்கினாா். திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அசோகன், துணை இயக்குநா் (மாவட்ட குடும்ப நலச்செயலகம்) செல்வி, தேசிய நலக்குழுமம் ஒருங்கிணைப்பாளா் தேவிகா, மக்கள் கல்வி தகவல் அலுவலா் பன்னீா்செல்வம், புள்ளியியல் உதவியாளா் நதியா, வட்டார சுகாதார புள்ளியிலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புனித வளனாா் கல்லூரி-சிஐஇஎல் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பூா்த்தி செய்யப்பட்ட 15.38 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் செயலியில் பதிவேற்றம்: திருச்சி ஆட்சியா் தகவல்

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படையினருக்கு நற்சான்றிதழ்

கிரஷா் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி ஒன்றியத்தில் எஸ்ஐஆா் பணிகள்: திமுக எம்.பி சல்மா ஆய்வு

SCROLL FOR NEXT