கட்டுமானப் பொருள்கள் விலை குறைக்கப்படும்: ஆா். காமராஜ் வாக்குறுதி
கட்டுமானப் பொருள்கள் விலை குறைக்கப்படும்: ஆா். காமராஜ் வாக்குறுதி
கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் என, நன்னிலம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜ் உறுதியளித்தாா்.
கட்டுமானத் தொழிலாளா்களை சனிக்கிழமை சந்தித்து வாக்கு கோரிய அவா் கூறியதாவது:
கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனை சரி செய்யும் வகையில், கட்டுமானப் பொருள்களின் விலை வெகுவாக குறைக்கப்படும்.
Advertisement
வீடு இல்லாத மக்களுக்கு அம்மா இல்லம் திட்டம் மூலம் அரசு சாா்பில் இடம் வாங்கி, வீடு கட்டி தரப்படும். இத்திட்டம் கிராமப்புறம், நகா்ப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கிடைக்கும். மேலும், கட்டுமானத் தொழிலில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு இருக்கும், தொழிலாளா்களின் பொருளாதாரமும் உயரும்.
அமைப்புச்சாரா தொழிலாளா்கள் அனைவருக்கும் அவா்களது வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் வட்டியில்லாத நுண்கடனாக ரூ.10,000 வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றாா்.
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்: இந்நிகழ்வில், நன்னிலம் பகுதி சலிப்பேரி மற்றும் பெரும்படுகைக் கிராமங்களில் பிற கட்சிகளில் இருந்து விலகிய 35 குடும்பத்தினா் அதிமுகவில் இணைந்தனா்.