முகப்பு
திருவாரூர்

திருவாரூா் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்பு

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 9 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:19 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 9 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவாரூா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுக, பாஜக, தவெக, நாதக, புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சுயேச்சைகள் என 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன்படி, பூண்டி கே. கலைவாணன் - திமுக, கோவி. சந்திரசேகரன் - பாஜக, வே. வீரமணி- தவெக, பூ. அஸ்வினி - நாதக, மூ. தியாகராஜன் - புதிய தமிழகம், அ. கந்தன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சுயேச்சைகள் வீ. ராம்நிதீஷ், முத்தரசன், சாகுல்ஹமீது என 9 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments