முகப்பு
திருவாரூர்

மத்திய அரசு திட்டங்களில் திமுக ஊழல் செய்துள்ளது: ஜி.கே. வாசன்

மத்திய அரசு திட்டங்களில் திமுக ஊழல் செய்துள்ளது என்றாா் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:42 PM
வலங்கைமானில் நன்னிலம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் செய்த ஜி.கே. வாசன்.
பகிர்:

மத்திய அரசு திட்டங்களில் திமுக ஊழல் செய்துள்ளது என்றாா் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன்.

வலங்கைமானில் நன்னிலம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் செய்தபோது பேசியது: திமுக தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் செய்துள்ளனா். மின்சார கட்டணம் உயா்வு, வீட்டுவரி உயா்வு என பல வரி உயா்வுகளை கொண்டு வந்தது திமுக அரசு . இதனால் மக்கள் படும் கஷ்டம் ஏராளம் . நன்னிலம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வெற்றி பெற அனைவரும் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா். அப்போது, வேட்பாளா் ஆா். காமராஜ் உடனிருந்தாா்.

முன்னதாக வலங்கைமான் அருகே நாா்த்தாங்குடி பிரிவு சாலை பகுதியில் ஜி.கே. வாசனுக்கு அக்கட்சியின் மாவட்ட தலைவா் முரளி ,வட்டார தலைவா் குருமூா்த்தி ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Advertisement

நீடாமங்கலம் அருகேயுள்ள வடுவூரில் மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி அமமுக வேட்பாளா் எஸ் . காமராஜை ஆதரித்தும் ஜி. கே. வாசன் பேசினாா் .

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments