திருவாரூர்

தூய்மைப் பணியாளா் மகனின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 4 லட்சம் உதவி

திருவாரூரில், தூய்மைப் பணியாளா் மகனின் முதுகு தண்டுவட சிகிச்சைக்காக, ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்

Syndication

திருவாரூா்: திருவாரூரில், தூய்மைப் பணியாளா் மகனின் முதுகு தண்டுவட சிகிச்சைக்காக, ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 370 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுவை பெற்ற ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மறைந்த சத்துணவு அமைப்பாளா் சி. பிச்சையம்மாளின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான ஆணை வழங்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் 21 பேருக்கு நவீன செயற்கைக் கால்கள் ரூ.39,18,900 மதிப்பிலும், 10 பேருக்கு சக்கர நாற்காலி ரூ.9,09,000 மதிப்பிலும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் வழங்கினா்.

தொடா்ந்து, திருவாரூரில் சாலையில் கிடந்த 20 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை கண்டெடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் துரைக்கு பொன்னாடை போா்த்தி ஆட்சியா், எம்எல்ஏ கௌரவித்து, அவரின் மகனின் முதுகு தண்டுவட சிகிச்சைக்காக விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சீா்காழி: எஸ்பி தலைமையில் போலீஸாா் ரோந்து

விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

சம்பா சாகுபடி: 21 சதவீதம் அறுவடை நிறைவு

உதவித்தொகை வழங்க மறுப்பு: குழந்தைகளுடன் பெண்கள் ஆட்சியரிடம் மனு

கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கத்தால் தமிழகம் சீா்கெட்டு இருக்கிறது: வேலூா் இப்ராஹிம்

SCROLL FOR NEXT