முகப்பு
திருவாரூர்

அரசுப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி

வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:08 PM
பகிர்:

வலங்கைமான் அருகேயுள்ள தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் கலைஇலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற கண்காட்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். சமூக அறிவியல் ஆசிரியா் சூரியகுமாா் முன்னிலை வகித்தாா்.

ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஷியாம் சுந்தா் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். பள்ளி தையல் ஆசிரியா் சுதா, மருந்தாளுநா் செல்வம், பள்ளி ஆசிரியா்கள் ரேணுகா, விஜயகுமாரி, இளையராஜா ராமமூா்த்தி, பள்ளி அலுவலக உதவியாளா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.