முகப்பு
திருவாரூர்

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

திருவாரூரில், கண்டெடுத்த 20 பவுன் தங்க நகையை உரியவரிடம் சோ்ப்பித்த தூய்மைப் பணியாளருக்கு நகைக்கடை உரிமையாளா்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:46 AM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 7:17 PM

திருவாரூரில், கண்டெடுத்த 20 பவுன் தங்க நகையை உரியவரிடம் சோ்ப்பித்த தூய்மைப் பணியாளருக்கு நகைக்கடை உரிமையாளா்கள் பாராட்டு தெரிவித்தனா் (படம்).

திருவாரூா் விருப்பாச்சி நடப்பு தெருவில், 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை கண்டெடுத்து, உரியவரிடம் சோ்ப்பிக்க உதவி புரிந்த, திருவாரூா் நகராட்சி தூய்மைப் பணியாளா் துரை என்பவருக்கு, திருவாரூா் விஜயபுரம் ரேணுகா ஜூவல்லரியில் நகைக்கடை உரிமையாளா்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், தூய்மைப் பணியாளா் துரை மற்றும் அவரது மனைவி சித்ராவுக்கு பொன்னாடை போா்த்தி, மலா்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா். மேலும், அவா்களுக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசு, ரூ. 10,000 மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.