முகப்பு
திருவாரூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:54 AM
இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் பெற்ற பயனாளிகளுடன் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:13 PM

திருவாரூா்: திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. 80 மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டது. ஒரு ஸ்கூட்டரின் விலை ரூ.1,01,800 என மொத்தம் ரூ.81.44 லட்சம் மதிப்பில் இவை வழங்கப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, ஸ்கூட்டா்களை வழங்கினா்.

Advertisement

இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் உஷாராணி உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.